கிருமி நாசினி சுரங்கம் கிருமிகளை அழிக்குமா? – மருத்துவர்கள் குழு தகவல்!

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (09:34 IST)
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் வைக்கப்படும் கிருமி நாசினி சுரங்கத்தால் முழுவதுமாக கிருமிகளை அழிக்க  முடியாது என மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தமிழத்தின் பல மாவட்டங்களில் முக்கிய இடங்களில் கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் இதற்குள் புகுந்து வெளியேறினால் அதில் தெளிக்கப்படும் கிருமி நாசினியால் வைரஸ் தொற்றுகள் அழியும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் மருத்துவர்கள் குழு இதுகுறித்த தகவல் ஒன்றை தமிழக அரசுக்கு அளித்துள்ளது. அதில் கிருமி நாசினி சுரங்கத்தில் பயன்படுத்தப்படும் சோடியம் ஹைட்ரோகுளோட் மிகவும் குறைவான அளவிலேயே பயன்படுத்தப்படுவதால் அது கிருமியை அழிக்காது. அதேசமயம் அதிகமாக பயன்படுத்தினால் தோல் எரிச்சல், கண் எரிச்சல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்