மனிதர்கள் மூலம் மனித குரங்குகளுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம்!

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (09:24 IST)
மனித இனத்துடன் பரிணாம வளர்ச்சி ரீதியாக நெருங்கிய தொடர்புடையதாகக் கருதப்படும் மனிதக் குரங்குகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மனிதர்கள் எவ்வாறு முடக்கப்பட்டிருக்கிறார்களோ, அதேபோல மனிதக் குரங்குகளும் அவற்றின் வாழ்விடங்களில் இருந்து வெளியேற முடியாத வகையில் முடக்கப்பட்டுள்ளன.

இதனால், மனிதக் குரங்குகள், ஒராங்குட்டான் போன்றவை இருக்கும் உயிரியல் பூங்காக்கள் ஆப்பிரிக்காவில் மூடப்பட்டுள்ளன. அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடம் என்பதால் மனிதர்களிடம் இருந்து, அவற்றுக்கு பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இவை மூடப்பட்டுள்ளன. எனினும், மனிதர்களிடம் இருந்து மனிதக் குரங்குகளுக்கு வைரஸ் பரவுமா என்பது இதுவரை தெரியவில்லை.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் ஒரு பெண் புலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்