அரசு கொடுக்கும் ரூ.7 லட்சம் எங்களுக்கு வேண்டாம் - அனிதாவின் சகோதரர் திட்டவட்டம்

Webdunia
ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (16:13 IST)
மாணவி அனிதாவின் மரணத்திற்கு தமிழக அரசு அளிக்கும் நிதியுதவிவை வேண்டாம் என அவரின் குடும்பம் மறுத்துவிட்டது.


 

 
மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த மாணவி அனிதா, நீட் தேர்வில் தேர்ச்சியடையாததால் தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல இடங்களிலும் நேற்று போராட்டம் வெடித்தது. 900 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டனர்.
 
அனிதாவின் உடலுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அவரின் உடல் நேற்று இரவு 10 மணிக்கு மேல் தகனம் செய்யப்பட்டது. 


 

 
அனிதாவின் மரணத்திற்கு அறிக்கை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அனிதாவின் குடும்பத்துக்கு 7 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
 
இந்நிலையில் அரசு வழங்கும் அந்த உதவித்தொகை தங்களுக்கு வேண்டாம் என அனிதாவின் சகோதரர் மறுத்துவிட்டார். என் தங்கை அனிதாவிற்கு ஏற்பட்ட நிலைமை யாருக்கும் ஏற்படக்கூடாது. நீட் தேர்வை அரசு ரத்து செய்ய வேண்டும். அதுவே அரசுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை. அப்படி அறிவித்தால் உங்கள் உதவி தொகையை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்” என அரியலூர் மாவட்ட கலெக்டரிடம் அவர் கூறிவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்