பீகார் மாநிலம் பாட்னாவில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடந்த நிலையில், அதில் கலந்து கொண்ட ராகுல் காந்தி பேசிய போது, அரசியல் அமைப்பு புத்தகத்தின் நகலை கையில் வைத்திருக்கும் போது, அதில் மகாத்மா காந்தி, அம்பேத்கர் மற்றும் ஜவஹர்லால் நேருவின் கொள்கைகள் இருப்பதை உணர்கிறீர்கள். அதில் சாவர்க்கரின் சித்தாந்தம் எதுவும் கிடையாது,” என்றார்.
மகாத்மா காந்தி தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை சத்திய சோதனை என்ற புத்தகமாக எழுதியுள்ளார். அதில் அவர் உண்மையை மட்டுமே எழுதியிருந்தார். ஆனால் பிரதமர் மோடி தனது சுயசரிதையை எழுதினால், அதற்கு பொய்களின் சோதனை என்று தலைப்பிடலாம் என அவர் கிண்டலாக தெரிவித்துள்ளார். அவரது பேச்சு பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.