தெற்கு சூடானை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை.. விசா நிறுத்தம்.. என்ன காரணம்?

Siva

செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (09:22 IST)
தெற்கு சூடான சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், தெற்கு சூடான சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் விசாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதை அடுத்து, அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது அதிரடி நடவடிக்கைகள் காரணமாக உலகம் முழுவதும் பெரும் தாக்கம் ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடானின் அகதிகள் அமெரிக்காவில் இருந்த நிலையில் அவர்கள் சமீபத்தில் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால் அந்த அகதிகளை ஏற்றுக்கொள்ள தெற்கு சூடான அரசாங்கம் மறுத்துவிட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த அமெரிக்கா, தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கி வந்த விசாக்களை உடனடியாக ரத்து செய்வதாக அறிவித்தது. எனவே, இனி தெற்கு சூடானில் இருந்து யாரும் அமெரிக்காவுக்கு வர முடியாது என்றும், அத்துமீறி வர முயன்றால் தடுக்கப்படுவார்கள் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனால் அமெரிக்கா மற்றும் தெற்கு சூடானின் இடையே பெரும் பதற்ற நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்