திமுக ஆட்சியின் அவலங்களை மறைக்க ஆளுநர் விவகாரம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது: டிடிவி தினகரன்

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (16:52 IST)
திமுக ஆட்சியின் அவலங்களை மறைக்க ஆளுநர் விவகாரம் ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது என்ன அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அலுவலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தமிழ்நாடு சட்டசபையில் நேற்று நடந்தது கருப்பு நாளாக பார்க்கப்படுகிறது என்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக யார் செயல்பட்டாலும் அது தவறுதான் என்று ஆளுநர் இந்த நடவடிக்கை வருத்தமளிக்கும் செயலாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில் மத்திய அரசு ஆளுனரை திரும்பப் பெற்றால் மத்திய அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அரசியல் தலைவராக முதலமைச்சர் செய்தது சரி இல்லை என்றும் திராவிட மாடல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவதற்கும், ஊழலை மறைப்பதற்கும் ஆளுநர் விவகாரம் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்றும் வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்