ஒரு பிடி மண்ணு கூட இங்கு இருந்து எடுத்துட்டு போக முடியாது: கவர்னர் குறித்து திமுக எம்பி டுவிட்

செவ்வாய், 10 ஜனவரி 2023 (11:54 IST)
நேற்று சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக வைரல் ஆகி வரும் நிலையில் திமுக எம்பி செந்தில்குமார் டுவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா படத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
 
அதில், ‘இது எங்க கோட்டை, ஒரு பிடி மண்ணு கூட இங்கிருந்து எடுத்துட்டு போக முடியாது, வெளியே போ என்று கூறும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ மூலம் அவர் நேற்றைய கவர்னர் நிகழ்ச்சியை மறைமுகமாக கூறியுள்ளார் என்பது தெரிய வருகிறது. 
 
மேலும் இந்த டுவிட்டுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய சட்டசபை நிகழ்வின்போது கவர்னர் சட்டசபையை விட்டு வெளியேறும் போது ’வெளியே போ’ என அமைச்சர்கள் உள்பட திமுக எம்பிக்கள் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்