அதிமுகவை வெளுக்கும் போது காங்கிரஸையும் விமர்சித்த ஆ ராசா!

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (15:10 IST)
2 ஜி ஊழல் வழக்கில் தான் குற்றவாளி இல்லை என்பதால்தான் நீதிமன்றம் தன்னை விடுவித்துள்ளது என மத்திய அமைச்சர் ஆ ராசா தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய ஊழல் என ஊடகங்களாலும் எதிர்க்கட்சிகளாலும் பேசப்பட்ட 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி. சைனி கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி அறிவித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்துள்ளன. ஒருவருடமாக இவ்வழக்கு விசாரணையில் இருந்துவருகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக ஆ ராசா மீது இந்த ஊழல் வழக்கு பற்றிய விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஜெயலலிதாவை ஆ ராசா விமர்சித்ததை அடுத்து இப்போது அதிமுகவினர் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆ ராசா ‘2 ஜி வழக்கில் நான் ஒரு நாள் கூட வாய்தா வாங்கவில்லை. பாஜக ஆட்சியில்தான் என் மீதான விசாரணை நடந்தது. வதந்தி, ஊகம், கிசுகிசு என்பது தான் 2ஜி வழக்கு என நீதிபதிகள் கூறியுள்ளனர். இந்த வழக்கில் காங்கிரஸ் கையாலாகததால் விலகிக் கொண்டது. 2ஜி வழக்கில் நான் விடுவிக்கப்பட்டது பா.ஜ.,விற்கு பெரிய அதிர்ச்சி அளித்துள்ளது. ஆனால் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உண்மைகளை மறைத்து முதல்வரும், அதிமுகவினரும் பேசி வருகின்றனர்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்