சூரி புகார் மீது என்ன விசாரணை செய்துள்ளீர்கள்- விசாரணை அறிக்கைய கேட்ட நீதிமன்றம்!

வெள்ளி, 16 அக்டோபர் 2020 (18:01 IST)
நடிகர் சூரி தான் சொத்து வாங்கித் தரப்படுவதாக சொல்லி ஏமாற்றப்பட்டதாக கொடுத்த வழக்கில் நீதிமன்றம் விசாரணை அறிக்கைக் கேட்டுள்ளது.

நடிகர் சூரியை தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் விஷ்ணுவிஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஆகிய இருவரும் ரூ.2.70 கோடி ஏமாற்றியதாக சமீபத்தில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.50 லட்சத்திற்கும் மேல் உள்ளதால் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு சென்றுள்ளதாகவும்,  மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் தற்போது சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திடீரென மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் தான் ஏற்கனவே அளித்திருந்த நில மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது நீதிமன்றம் சூரி அளித்த புகாரில் முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா உள்ளிட்டோரிடம் நடத்திய விசாரணை என்ன என்பது குறித்து நவம்பர் மாத இறுதிக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்