நடிகர் சூரியை தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மற்றும் விஷ்ணுவிஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா ஆகிய இருவரும் ரூ.2.70 கோடி ஏமாற்றியதாக சமீபத்தில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரில் மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.50 லட்சத்திற்கும் மேல் உள்ளதால் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு சென்றுள்ளதாகவும், மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.