ராமநாதபுரம் பகுதியில் 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு: பொதுமக்கள் அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (17:39 IST)
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் மாதம் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்குருப்பூஜை ஆகியவை நடைபெறவிருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு இரண்டு மாதங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தடை உத்தரவு காலத்தில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்