8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் ஸ்ரீகணேஷ், அந்த படத்துக்குப் பிறகு 5 ஆண்டுகள் கழித்து இயக்கிய திரைப்படம் குருதி ஆட்டம். இந்த படத்தில் அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். ஆனால் எதிர்பார்த்த வெற்றியை இந்த திரைப்படம் பெறவில்லை. இதையடுத்து ஸ்ரீகணேஷ் அஜித் படத்தை இயக்க உள்ளதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற தகவல் பரவி வருகிறது.