ஆனந்த சதுர்த்தி நடப்பதால் லால்பாக் ராஜா கணபதி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் பல பொது இடங்கள், கோவில்கள், தெருக்களில் பெரிய பெரிய அளவில், வித்தியாச வித்தியாசமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி மும்பையில் மிகவும் பிரசித்தி பெற்ற லால்ராஜா கணபதியை தரிசிக்க ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
நாளை ஆனந்த சதுர்த்தி நடப்பதால் லால்பாக் ராஜா கணபதி சிலை கரைப்பிற்காக ஏற்பாடுகள் செய்ய இருப்பதால் இன்று காலை 6 மணி முதல் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.