ஹசினாவுக்கு இந்தியாவில் அடைக்கலம் வழங்கியது ஏன்.? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்..!

Senthil Velan
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (15:24 IST)
வன்முறை காரணமாக வங்கதேச நாட்டில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா,  வேண்டுகோள் விடுத்ததை அடுத்து அவருக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்தோம் என்று மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
 
வங்கதேச விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.  வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களின் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார். 
 
வங்கதேசம் மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் பல ஆண்டுகளாக நட்பு நாடாக உள்ளன என்றும் வங்கதேசத்தில் வன்முறை வெடித்து நிலைமை மோசமானதால் ஹசீனாவின் விமானம் இந்தியா வர அனுமதித்தோம் என்றும் கூறினார். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென ஹசீனா இந்தியா வந்தார் என்று அவர் தெரிவித்தார். 

ஹசீனா வேண்டுகோள் விடுத்ததை அடுத்து அவருக்கு இந்தியாவில் அடைக்கலம் கொடுத்தோம் என்றும் பதவி விலகிய பின்னர் இந்தியா வருவதற்கு ஷேக் ஹசீனா அனுமதி கோரினார் என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். மேலும் வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களில் 9,000 பேர் மாணவர்கள் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். 

ALSO READ: ஸ்ரீவில்லிபுத்தூர் உற்சவத்தில் சாதிய அடையாளங்களுக்கு தடை..! நீதிமன்றம் அதிரடி..!
 
வங்கதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலையை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது என்றும்  வங்கதேச ராணுவத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.  வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்