இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததோடு, நாட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் வங்கதேசம் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்கு தங்களை அழைக்கவில்லை என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், வங்கதேச நிலைமை தொடர்பாக மத்திய அரசு தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றார். தற்போதைய நிலையில் வங்கதேசத்தில் இருந்து 12,000 முதல் 13,000 இந்தியர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டிய அவசர நிலைமை இல்லை என்றும் இருந்தாலும் நிலைமையை கண்காணித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.