டெல்லி செங்கோட்டை என்னுடையது என பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த பெண்ணின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது.
முகலாயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட செங்கோட்டைக்கு தானே வாரிசு என்று சுல்தானா பேகம் என்ற பெண் டெல்லி செங்கோட்டை தனக்கு சொந்தம் என கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது செங்கோட்டை மட்டும் ஏன் ஆக்ரா பதேபூர் சிக்ரி போன்ற இடங்களில் கோட்டைகள் ஏன் இல்லை என்ற நீதிபதி கேள்வி எழுப்பி பின்னர் தவறான எண்ணத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.
கடந்த ஆண்டு இதே பெண் டெல்லி ஐகோர்ட்டில் இதே போன்ற கோரிக்கையுடன் ஒரு மனுவை தாக்கல் செய்த நிலையில் ஐகோர்ட்டும் அந்த மனுவை தள்ளுபடி செய்த நிலையில் தற்போது சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.