TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

Mahendran

திங்கள், 5 மே 2025 (19:08 IST)
தமிழ்நாட்டில் குரூப் 2ஏ மெயின் தேர்வு 82 மையங்களில் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் 21,563 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
 
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  கடந்த ஆண்டு ஜூன் 20ஆம் தேதி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணியிடங்களுக்கான 2,540 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.
 
குரூப் 2ஏ மெயின் தேர்வில், தாள் II எனப்படும் பொதுவான அறிவு, திறனறிவு, மனக்கணக்கு மற்றும் நுண்ணறிவு போன்ற பாடங்களுடன் பொதுத் தமிழ் அல்லது பொதுத் ஆங்கிலம் தேர்வு இடம்பெற்றது.
 
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ மெயின் தேர்வு முடிவுகளை தற்போது அறிவித்துள்ளது. இந்த முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
 
மேலும், 12வது முறையாக, குறிப்பிட்ட மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்து உள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்