காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் 28 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் பயங்கரவாதிகளால் மதத்தின் பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் நமது ராணுவம் மற்றும் தேசப் பாதுகாப்பு குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது ஆளும் அரசு நடவடிக்கை எடுக்கக் கோரியும், சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியுள்ள வங்கதேசக் குடியேறிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை திமுக அரசு உடனே துரிதப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இன்று மாலை சென்னையில் தமிழக பாஜக சார்பாக கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
காஷ்மீரில் நடந்த மனிதத் தன்மையற்ற அந்தக் கொடூரத் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, மக்கள் நலனையும், நமது தேசத்தின் பாதுகாப்பையும் முன்னிறுத்தும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு, பயங்கரவாதத்திற்கு எதிரான நமது வலுவான கண்டனங்களைப் பதிவு செய்தோம்.