பாகிஸ்தான் வான்வெளி வழியாக விமானங்கள் செல்ல வேண்டாம் என்று உலகின் முக்கிய நாடுகளின் விமான நிறுவனங்கள் முடிவு எடுத்ததை அடுத்து பாகிஸ்தான்களை மட்டும் இன்றி ஆப்கானிஸ்தான் வான்வெளியையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தங்கள் நாட்டின் வழியாக செல்லும் விமானங்களுக்கு கட்டணம் விதித்த நிலையில் தற்போது அந்த கட்டணங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகள் தற்போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக சீனா உள்பட மற்ற நாடுகளுக்கு செல்லும் விமானங்களை இந்தியா வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் வான்வெளி வழியாக செல்வது ஆபத்து என்ற காரணத்தினால் இந்த முடிவை எடுத்து உள்ள நிலையில் பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கும் மிகப்பெரிய வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியா வழியாக அனைத்து நாடுகளின் விமானங்கள் செல்வதால் தற்போது இந்தியாவுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.