வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சகோதரி இங்கிலாந்தில் இருப்பதாகவும் அவருடன் செட்டிலாக அவர் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் திடீரென வன்முறையாக மாறிய நிலையில் அரசால் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது என்பதும் இதனை அடுத்து ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பி சென்று விட்டார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் இந்தியாவில் இருந்து அவர் துபாய் அல்லது லண்டன் செல்ல திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் லண்டனில் அவரது சகோதரி இருப்பதால் லண்டன் செல்ல அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஹசீனா சகோதரி லண்டன் குடியுரிமை பெற்று பல ஆண்டுகளாக லண்டனில் இருப்பதாகவும் அதனால் லண்டனில் இருப்பது தான் அவருக்கு பாதுகாப்பு என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறிய நிலையில் அவர் இங்கிலாந்து அரசிடம் தஞ்சம் அடைய அனுமதி கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தவுடன் அவர் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.