உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயில் வரும் ஜனவரி 22-ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில்,
இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட விவிஐபிக்கள் 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், கோயில்கள் அமைக்க ரூ.400 கோடி கடன் வாங்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் சித்திரக்கூட்டில், வனவாசத்தின் போது ராமன், லட்சுமன், சீதா ஆகியோர் சென்றதாகக் கூறப்படும் இடங்களில் எல்லாம் கோயில்கள் அமைக்க மாநில அரசு முடிவெடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் ரூ.400 கோடி கடன் வாங்கவும் மத்திய பிரதேசம் அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.