விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு அருகேயுள்ள மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில். இந்தியக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சதுரகிரி பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத பவுர்ணமி வழிபாட்டிற்காக 24 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதி அளித்தது.
இந்த நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் சதுரகிரி மலைப்பாதைகளில் உள்ள ஆற்றுப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.