காதலுக்குக் குறுக்கே நின்ற தாய் – கொலை செய்து பிணத்தை மறைத்த மகள் !

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (10:55 IST)
தெலங்கானா மாநிலத்தில் தனது மகளின் காதலுக்கு குறுகே நின்ற தாயை மகளும் அவருடைய காதலனும் சேர்ந்து கொலை செய்துள்ளார்.

ஹைதரபாத் ஹயாத் நகரைச் சேர்ந்தவர் கீர்த்தி ரெட்டி எனும் கல்லூரி மாணவி. தன்னுடைய பெற்றோரோடு வசித்து வருகிறார். கீர்த்திக்கு அதே பகுதியைச் சேர்ந்த சஷி எனும் வாலிபரோடு காதல் மலர்ந்துள்ளது. கல்லூரி மாணவர்களான அவர்கள் இருவரும் அடிக்கடி வெளியே சென்று சந்தித்து வந்துள்ளனர்.

இதை அறிந்த கீர்த்தியின் தாய் அவரைக் கண்டித்து சஷியை சந்திக்கக் கூடாது என எச்சரிக்கை செய்துள்ளார். தங்கள் காதலுக்கு இடையூறாக இருந்த கோபமான கீர்த்தி தனது தாயைக் கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். தனது தந்தை வெளியூருக்கு சென்ற நாள் பார்த்து காதலனை வீட்டுக்கு வரவழைத்து கழுத்தை நெறித்து தாயைக் கொலை செய்துள்ளார்.

அதன் பின் மூன்று நாட்கள் அந்த பிணத்தோடு அதே வீட்டில் வசித்து வந்துள்ளனர். பிணத்தில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்ததும் அந்த உடலை அருகில் உள்ள ரயில்தண்டவாளத்திற்கு அருகில் வீசியுள்ளனர். அதன் பின் எதுவும் நடக்காதது போல இருந்துள்ளனர். ஆனால் வெளியூர் சென்ற தந்தை வீட்டுக்கு வந்த போது தனது மனைவியைக் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலிஸார் நடத்திய விசாரணையில் கீர்த்தியும் அவரது காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்