தங்கையைக் கொன்று புதைத்த அண்ணன் – நாடகமாடி பின் கைது !

செவ்வாய், 29 அக்டோபர் 2019 (10:34 IST)
மங்களூருவில் தனது தங்கையைக் கொலை செய்துவிட்டு காணாமல் போனதாகப் புகார் அளித்த இளைஞரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள முடிப்பு எனும் பகுதியைச் சேர்ந்த ஃபியானோ ஸ்வீடல் குடின்ஹோ என்ற 16 வயது பெண். இவர் தனது 18 வயது அண்ணன் சாம்சனுடன் வசித்து வந்துள்ளார். பியானோவைக் காணவில்லை என இரு வாரங்களுக்கு சாம்சன் கொடுத்த புகாரின் பேரில் போலிஸ் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவரான சாம்சன் ஒரு விதப் பதற்றத்துடனேக் காணப்பட அவர் மேல் சந்தேகம் வர அவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். அப்போது தனக்கும் ஃபியானோவுக்கும் வாக்குவாதம் எழ சுத்தியலால் தாக்கி தங்கையைக் கொலை செய்ததாகவும் பின்னர் அவரது சடலத்தை தனது வீட்டுக்குப் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் புதைத்ததாகவும் கூறியுள்ளார்.

இதன் பின் சாம்சன் அடையாளம் காட்டிய இடத்தில் போலிஸார் தோண்டிய போது அழுகிய நிலையில் பியானோவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பின்னர் பியானோவின் செல்போன், தலைமுடி, பல் ஆகியவை சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்