முதலாளி மனைவியோடு கள்ளத்தொடர்பு - பியரில் விஷம் கலந்து தொழிலாளி கொலை !

ஞாயிறு, 27 அக்டோபர் 2019 (08:51 IST)
வேலூரில் காண்ட்ராக்டரின் மனைவியோடு கள்ளத்தொடர்பு வைத்திருந்த கட்டிடத் தொழிலாளி பியரில் விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வேலூரை அடுத்த வானியம்பாடியில் கட்டிட ஒப்பந்ததாரராக இருந்து வருபவர் கனகராஜ். இவரிடம் சத்யராஜ் என்பவர் உள்ளிட்ட சிலர் பணியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் சத்யராஜுக்கும் கனகராஜின் மனைவிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த கனகராஜ் தனது மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத கனகராஜ் மற்ற தொழிலாளிகளையும் கூட்டு சேர்த்துக் கொண்டு சத்யராஜை மது அருந்த அழைத்துள்ளார். அங்கே சென்ற சத்யராஜுக்கு மட்டும் விஷம் கலந்த பியரைக் கொடுத்துள்ளார். அதைக் குடித்துவிட்டு மயங்கி இறந்த சத்யராஜை தூக்கிச் சென்று வனப்பகுதிக்குள் தூக்கிப் போட்டுள்ளனர்.

ஒரு வாரம் கழித்து சிதைந்த நிலையில் சத்யராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நடந்த விசாரணையில் கனகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்