வதந்திகள் பரப்புவோரிடம் இருந்து விலகி இருக்க வேண்டும் - பிரதமர் மோடி !!

Webdunia
திங்கள், 16 டிசம்பர் 2019 (18:10 IST)
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் போராட்டம் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் துரதிஷ்டவசமனாது. வருத்தமளிக்கிறது என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :
 
நாட்டில், விவாதம், கலந்துரையாடல், மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பதும் என்பது அத்தியாவசியமானது. ஆனால் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் மற்றும் இடையூறு விளைவிப்பது பண்பாடு அல்ல என தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் மீண்டு ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், ’ஒற்றுமை, அன்பு, சகோதரத்துவத்தை காட்டுவற்கான நேரம் இதுதான். இதனால் ஒவ்வொருவருக்கும் நான் சொல்லுவது என்னவென்றால், தவறான தகவல் மற்றும் வதந்திகள் பரப்புவோரோரிடம் விலகி இருக்கவேண்டும்’ என  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்