மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியிமை மசோதா நாட்டின் பல பகுதிகளில் போராட்டத்தை கிளப்பியுள்ள நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இது குறித்து பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது...
குடியுரிமை மசோதாவை பொறுத்தவரை எல்லா மதங்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்த பின்பு இதைப்போன்ற மாற்றங்களை கொண்டு வந்திருக்கலாம். ஏற்கனவே காஷ்மீர் விவகாரம் ராமர் கோவில், அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பாராட்டப்பட்டது.
அதைபோல் குடியுரிமை திருத்த மசோதாவும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு எல்லா மதத்தினராலும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால் இந்த குடியேற்ற மசோதா சட்டத்தை தேமுதிக ஏற்றுக்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.