குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் துரதிஷ்டவசமானது - பிரதமர் மோடி
திங்கள், 16 டிசம்பர் 2019 (14:34 IST)
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் 'குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் துரதிஷ்டவசமனாது. வருத்தமளிக்கிறது' என பிரதமர் மோடி தனது டுவிட்ட ர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் துரதிஷ்டவசமனாது. வருத்தமளிக்கிறது
நாட்டில், விவாதம், கலந்துரையாடல், மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பதும் என்பது அத்தியாவசியமானது. ஆனால் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் மற்றும் இடையூறு விளைவிப்பது பண்பாடு அல்ல என தெரிவித்துள்ளார்.