இந்தியாவில் விரைவில் ஸ்கை பஸ்: மத்திய அமைச்சர் தகவல்

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (12:13 IST)
இந்தியாவில் விரைவில் ஸ்கை பஸ்: மத்திய அமைச்சர் தகவல்
இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழித்தடங்களில் விரைவில் ஸ்கை பஸ்கள் எனப்படும் பறக்கும் பேருந்துகள் அறிமுகமாகும் உள்ளன 
 
ஸ்கை பஸ் என்பது மெட்ரோவை போலவே இருக்கும் ஒரு போக்குவரத்து அமைப்பாகும். மணிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த பேருந்துகளில் பயணிகள் பயணிக்கலாம். எரிபொருளுக்கு மாற்றாக மின்சார ஆற்றலை பயன்படுத் தலாம் 
 
டெல்லி மற்றும் ஹரியானாவில் சில பகுதிகளில் ஸ்கை பஸ்களை இயக்க பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்
 
போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசை குறைப்பதற்கான மாற்று வழியாக இது இருக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்