18,000 ஆக எகிறிய தினசரி பாதிப்பு – கொரோனா நிலவரம்!

புதன், 27 ஜூலை 2022 (10:10 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.  


இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்புகள் நிலவி வரும் நிலையில் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து மக்களை காக்க தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,313 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,39,38,764 ஆக உயர்ந்தது. புதிதாக 57 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,26,167ஆக உயர்ந்தது.

கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 20,742 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,32,67,571ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,45,026 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் 2,02,79,61,722 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 27,37,235  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்