இரண்டாவது நாளாக தொடர்ந்து உயரும் சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் நிம்மதி!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (09:30 IST)
கடந்த சில நாட்களக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது
 
நேற்று சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் சுமார் 300 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது. இதனை அடுத்து 57373 என்ற விலையில் சென்செக்ஸ் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 93 புள்ளிகள் உயர்ந்து 17229 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை சென்செக்ஸ் உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்