ரெண்டு லட்டுக்கு மேல கிடையாது! – திருப்பதியில் லட்டு பிரசாதம் தட்டுப்பாடு!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (09:02 IST)
திருப்பதி கோவிலில் லட்டு பிரசாதத்திற்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது பக்தர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல பகுதிகளில் இருந்தும் தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வழிபாட்டிற்காக வருகின்றனர். இந்த பக்தர்களுக்கு பிரசாதமாக ஒரு லட்டு வழங்கப்படுவது வழக்கம். ஒரு லட்டுக்கு மேல் தேவை என்றால் அதற்கு பணம் செலுத்த வேண்டும்.

கடந்த ஆண்டில் திருப்பதி தேவஸ்தானம் லட்டு பிரசாதத்தின் விலையை உயர்த்தியது. அதன்படி 25 ரூபாய் சின்ன லட்டு 50 ரூபாய்க்கும், ரூ.100 பெரிய லட்டு ரூ.200க்கும் விற்பனையாகி வருகிறது. ஆனால் பக்தர்கள் தேவையான அளவு லட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தது. இதனால் பக்தர்கள் சிலர் உறவினர்களுக்கும் சேர்த்து நிறைய லட்டுகளை வாங்கி சென்றனர்.

லட்டு விற்பனையாகும் அளவிற்கு மீண்டும் தயாரிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் லட்டுக்கு பற்றாக்குறை எழுந்துள்ளதால் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுடன் கூடுதலாக இரண்டு லட்டுகள் மட்டுமே வாங்கிக் கொள்ள முடியும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இது பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்