புதிய வகை கொரோனாவால் இந்தியாவுக்கு பாதிப்பா? பிரபல விஞ்ஞானி தகவல்

Webdunia
வெள்ளி, 23 டிசம்பர் 2022 (21:18 IST)
சீனா உள்பட ஒருசில நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் புதிய வகை கொரோனா வைரஸால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை என பிரபல விஞ்ஞானி டெட்ராஸ் என்பவர் தெரிவித்துள்ளார் 
 
சீனாவில் தற்போது பிஎப்7 என்ற கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருவது குறித்து வருத்தம் தெரிவித்த விஞ்ஞானிகள் இந்தியாவை பொருத்தவரை பிஎப்7  வைரஸ் குறித்த அச்சங்கள் தேவையற்றது என்றும் இந்தியாவில் பெரிய அளவு இந்த கொரோனா பாதிப்புகள் ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்
 
ஆனால் அதே நேரத்தில் முக கவசம் அணிதல் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயம் என்றும் அவர் அறிவித்துள்ளார். ஏற்கனவே இந்தியாவில் பரவிய வைரஸ் வகை போன்றதே தற்போது பரவிவரும் வைரஸ் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்