மூக்கு வழி கொரோனா மருந்து: யாரெல்லாம் போடக்கூடாது!

வெள்ளி, 23 டிசம்பர் 2022 (17:55 IST)
மூக்கு வழியாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த மருந்து இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் இந்த மருந்து கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் தற்போது 18 வயதுக்குள் உள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே இரண்டு தடுப்பூசி செலுத்தாதவர்கள் மூக்கு வழியாக கொரோனா மருந்தை செலுத்த முன்வரக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறையில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மற்றும் ஏற்கனவே இரண்டு தடுப்பு ஊசி செலுத்தி அவர்கள் மட்டுமே மருத்துவரிடம் சான்று பெற்று இந்த மூக்கு வழியான தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்