உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - ஆதார் கார்டு தொடருமா?

Webdunia
வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (11:13 IST)
மத்திய அரசு கொண்டு வந்த ஆதார் கார்டு தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 


 

 
ஆதார் கார்டு அவசியம் என்ற திட்டத்தை இரண்டு வருடங்களுக்கு முன்பு மத்திய அரசு கொண்டுவந்தது. மேலும், நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களும் ஆதார் கார்டை பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதோடு, கேஸ் இணைப்பு, ரேஷன் கார்டு, வங்கி கணக்குகள், பேன் கார்டு மற்றும் அரசு வழங்கும் அத்தனை சலுகைகளையும் மக்கள் பெற வேண்டுமெனில் ஆதார் கார்டு கட்டாயம் என கூறப்பட்டது.
 
இது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. எனவே, இந்த திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த திட்டத்தினால் தனி நபர் ரகசியம் பாதிக்கப்படுவதாக அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில், இந்த வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட சாசன அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது. அதில், தனி நபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை என கூறியுள்ளது. இந்த தீர்ப்பை பல சட்ட வல்லுனர்கள் வரவேற்றுள்ளனர்.  இந்த தீர்ப்பு மத்திய அரசு கொண்டு வந்த ஆதார் திட்டத்திற்கு எதிரான தீர்ப்பாகவே பார்க்கப்படுகிறது.
 
ஆனால், ஆதார் கட்டாயமா, இல்லையா, எந்தெந்த திட்டங்களுக்கு ஆதார் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது அடுத்தடுத்த விசாரணைகளில் நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பை பொறுத்தே அமையும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்