இன்று நீட் விசாரணை: மாணவர்களின் எதிர்காலம் நீதிபதியின் கையில்

செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (06:30 IST)
நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்கும் வகையில் தமிழக அரசு இயற்றிய அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்துவிட்டாலும் நீட் ஆதரவு மாணவர்கள் தாக்கல் செய்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரவுள்ளது



 
 
தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கையை நடத்த சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் இன்றைய விசாரணையின் முடிவில் தடை விலக்கப்படுமா? அல்லது நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி மருத்துவம் படிக்கவுள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இன்று சுப்ரீம் கோர்ட் நீதிபதி எடுக்கும் முடிவை பொறுத்தே நீட் எழுதாத மாணவர்களின் எதிர்காலம் உள்ளது.
 
இந்த நிலையில் இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது போல, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், 'நீட்' தகுதி தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கு, 2,653 கூடுதல் இடங்கள் ஏற்படுத்தி கொள்ள, எம்.சி.ஐ., என்ற, இந்திய மருத்துவ கவுன்சிலிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது' என்று கூறினர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்