உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தாஜ்மகால் தற்போது சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக அதன் அழகை இழந்து வருகிறது. மத்திய அரசு புதிதாக அமைக்க உள்ள ரயில்பாதை தாஜ்மகால் அருகே அமைய உள்ளது. அதற்காக தாஜ்மகாலை சுற்றி உள்ள 450 மரங்களை வெட்ட அனுமதிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
தாஜ்மகால் உலக புகழ்பெற்ற நினைவு சின்னம். அதை அழிக்க போகிறீர்களா? தாஜ்மகாலின் சமீபத்திய படங்களை பார்த்து இருக்கிறீர்களா? இணையதளத்தில் பாருங்கள். அதன்பிறகும் நீங்கள் விரும்பினால், தாஜ்மகாலை அழிக்க இந்திய அரசு விரும்புகிறது என்று பிரமாண பத்திரமோ அல்லது மனுவோ தாக்கல் செய்யுங்கள் என்றனர்.