சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை எப்போது? தேவஸ்தானம் அறிவிப்பு..!

Mahendran
வெள்ளி, 20 டிசம்பர் 2024 (13:10 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலில் டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் தொடங்கிய நிலையில், கோவில் நடை திறக்கப்பட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் தற்போது தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், 46 நாட்கள் யாத்திரை காலத்தின் நிறைவாக, சபரிமலை கோவிலில் டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஐயப்பன் சுவாமிக்கு தங்க அங்கி சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெறும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மண்டல பூஜை தினத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், கூட்டத்தை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் வெளியேறும் வாசலை எப்போதும் திறந்து வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூட்டத்தை கணக்கில் கொண்டு உணவகங்களில் அதிக எண்ணிக்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை இருப்பு வைக்கப்படுவதை உறுதி செய்திருப்பதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், பக்தர்களுக்கான கூடாரங்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களை மட்டுமே தங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நெரிசல் இல்லாமல் சுமுகமாக பக்தர்கள் செல்வதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்றும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்