அவுராய் மாவட்டத்தில் உள்ள சியூர் என்ற கிராமத்தில், ஏப்ரல் 24ஆம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ராம் சாகர் என்ற நபர், அவரது மனைவி பபிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
வாக்குவாதத்தின் போது கணவன் முன்வைத்த பேச்சுகளை பபிதா எதிர்த்ததாகவும், இதனால் கடும் கோபமடைந்த ராம் சாகர், மனைவியை கொலை செய்ய மிரட்டியதோடு, தாக்கி, பின்னர் கூர்மையான கத்தியால் அவரது தலைமுடியை எடுத்து மொட்டையடித்து தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, ராம் சாகர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.