பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர்.. 6 நாளாச்சு! எப்போ காப்பாத்துவீங்க?? - காங்கிரஸ் கேள்வி!

Prasanth Karthick

செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (17:56 IST)

பஞ்சாப் - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடித்து செல்லப்பட்ட இந்திய BSF வீரரை காப்பாற்றுவது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

 

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது தடைகளை இந்தியா விதித்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழல் நிலவி வருகிறது. அதேசமயம் பஹல்காம் தாக்குதல் நடந்த மறுநாள் பஞ்சாப் - பாகிஸ்தான் எல்லையை தாண்டியதாக இந்திய BSF வீரரை பாகிஸ்தான் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். 

 

கடந்த 6 நாட்களாக அவரை மீட்பது குறித்த எந்த பேச்சுவார்த்தையும் நடத்த அரசு முனையவில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

 

இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கோரா “BSF கான்ஸ்டபிள் பாகிஸ்தான் ரேஞ்சர்களால் பிடித்து வைக்கப்பட்டு 6 நாட்கள் ஆகின்றன. அவரது குடும்பத்தினர் பதில்களுக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அவரை மீட்டுக் கொண்டு வர அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்