பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில், விவசாய நிலத்தில் பணியில் இருந்த சாஹு, அருகிலிருந்த விவசாயிகளுடன் பயணித்தபோது ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்கச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது தன்னறியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் கடந்துவிட்டதாக BSF தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி மத்திய அரசை கடும் கேள்விகளுடன் எதிர்கொண்டு வருகிறது. சாஹுவின் மீட்பு தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்பதையும், அவரை பாதுகாப்புடன் மீட்பதற்கான திட்டங்கள் என்னவென்றும் கேட்டு இருக்கிறது.
இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் படைகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.