சபரிமலையில் வெயில்.. மீண்டும் திரும்பியது இயல்பு நிலை.. குவியும் தமிழக பக்தர்கள்..!

Siva

புதன், 4 டிசம்பர் 2024 (07:50 IST)
சபரிமலையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால், தமிழக பக்தர்கள் உள்பட சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது. தற்போது, மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளதுடன், சபரிமலையில் வெயில் அடிக்க தொடங்கியதால், தமிழக பக்தர்கள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நவம்பர் 30ஆம் தேதி முதல் சபரிமலையில் மூன்று நாட்கள் தொடர் கனமழை பெய்தது. இதனால் மலைப்பாதையில் சேதம் ஏற்பட்டதால், பக்தர்கள் கோவிலுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், அவ்வப்போது மழை பெய்ததாலும் தமிழக பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது.

அது மட்டும் இல்லாமல், தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ள பாதிப்பு இருந்ததால், பக்தர்கள் சபரிமலைக்கு செல்லும் தேதியை ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் சபரிமலையில் தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அவ்வப்போது வெயில் அடிக்கிறது. இதனால் இயல்பு நிலை திரும்பி வருவதோடு, பக்தர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை முதல் மழை பெய்யவில்லை என்பதால், பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காலநிலையை கணக்கில் கொண்டு, பக்தர்களின் தரிசனம் ஏற்பாடு செய்யப்படும். இன்றும் மழையின்றி வெயில் நிலைத்திருந்தால், பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று இடுக்கி மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்


Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்