சிறுமி வன்கொடுமை, தாயை கொலை செய்தது உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2018ம் ஆண்டில் சென்னை மாங்காடு பகுதியில் 6 வயது சிறுமி பக்கத்து வீட்டில் இருந்த தஷ்வந்த் என்ற இளைஞரால் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் ஜாமினில் வெளியே வந்தபோது தனது தாயையே அடித்துக் கொலை செய்த குற்றத்திற்காக மீண்டும் கைதானார்.
சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என உறுதியான நிலையில் அவரது தூக்குத் தண்டனை உறுதி செய்யபட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்ட தூக்கு தண்டனை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டின்போது இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தஷ்வந்த தனது தாயை கொன்ற வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தஷ்வந்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறியதால், அவர்தான் கொன்றார் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் தஷ்வந்தை இந்த வழக்கில் விடுதலை செய்வதாக செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் அறிவித்துள்ளது.
Edit by Prasanth.K