பொய் மிஷினே: மோடியை மறைமுகமாக விமர்சனம் செய்த ராகுல் காந்தி!

Webdunia
ஞாயிறு, 25 ஏப்ரல் 2021 (09:29 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி பிரதமர் மோடியை பொய் மிஷின் என்று மறைமுகமாக தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தினமும் லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவை அடுத்து அதிக மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது இந்தியாவில் தான் என்பதும் ஒரு நாள் கொரோனா பாதிப்பில் இந்தியா கடந்த சில நாட்களாக முதல் இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசி செலுத்தும் விகிதமும் தடுப்பூசி கிடைக்கும் விகிதமும் இந்தியாவில் மிக மிக குறைவாக இருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் மிக அதிகமாக 26.6 சதவீதம் தடுப்பூசி கிடைக்கும் நிலையில் இந்தியாவில் மக்கள்தொகை கணக்கின்படி 1.4% மட்டுமே தடுப்பூசி கிடைத்து வருவதாக புள்ளி விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன
 
இந்தப் புள்ளிவிவரத்தை வைத்து ராகுல்காந்தி கடுமையான டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். ’திரு போய் மெஷின் அவர்களே, இந்தியாவுக்கு தற்போது அவசிய தேவை தடுப்பூசி’ என்று பிரதமர் மோடியை மறைமுகமாக ராகுல்காந்தி விமர்சித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்