ஆக்சிஜன் டேங்கர்கள் தடுக்கப்படுகிறது..பிரதமர் மோடியிடம் முதல்வர் புகார்

வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (17:21 IST)
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் கொரொனா பரவலைக் கடுப்படுத்த மக்கள் கூடும் பொது இடங்களில் அரசு பதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரொனா பரவல் தீவிரம் அடைந்துள்ளதால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது

இந்நிலையில், டில்லிக்கு எடுத்துவரப்படும் ஆக்சிஜன் டேங்கர்கள் தடுத்து நிறுத்தப்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து டில்லி முதல்வர் கூறியுள்ளதாவது:

டில்லிக்கு எடுத்துவரப்படும் ஆக்ஸிஜன் டெங்கர்க்ள் பிற மாநிலங்களில் தடுத்து நிறுத்தப்படுகிறது. இதுதொடர்பாகத் தான் மத்திய அரசாங்கத்தில் யாரை சந்தித்துப் பேச வேண்டுமென பிரதமர் மோடியிடம் கேட்டுள்ளார் அரவிந்த் கெஜ்ரிவல்.
மேலும் டில்லியில் ஆக்ஸியன் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு முதல்வர் கெஜ்ரிவால் வருத்தம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்