அரசு தேர்வு விண்ணப்பங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி என்ற தகவல் வெளியான நிலையில் பிரியங்கா காந்தி இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரசு தேர்வு விண்ணப்பங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பதாக மத்திய அரசுக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்தார். விண்ணப்பங்கள் சமர்ப்பித்த பின்னர் தேர்வு நடக்காவிட்டால் ஜிஎஸ்டி வீணாகும் என்றும், இளைஞர்களின் கனவுகளை மத்திய அரசு வருமானமாக மாற்றியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கல்யாண் சிங் புற்றுநோய் மருத்துவமனை விளம்பரத்தில், காலியிட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 18% ஜிஎஸ்டி என்று இருப்பதை சுட்டிக்காட்டிய பிரியங்கா காந்தி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியாத பாஜக அரசு, வேலைக்கு விண்ணப்பிக்கும் படிவத்திற்கே கூட 18% ஜிஎஸ்டி போட்டி, அவர்கள் காயத்தில் உப்பை தேய்க்கிறது என விமர்சனம் செய்துள்ளார்.
அக்னிபத் திட்டம் உள்பட அரசு வேலைவாய்ப்புக்கும் இந்த ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதாக கூறிய பிரியங்கா காந்தி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க ஒவ்வொரு காசையும் சேமிக்கிறார்கள், ஆனால் பெற்றோரின் கனவை பாஜக அரசு வருமானத்திற்கு ஆதாரமாக மாற்றி விட்டது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.