புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

Mahendran

வெள்ளி, 18 ஜூலை 2025 (17:33 IST)
மிஸ் Golf என்று கூறப்படும் இளம் பெண் ஒருவர், புத்த துறவிகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு, அதை ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டி, ரூ.100 கோடி வரை பணம் பெற்றதாக கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த ஆண்டு ஜூன் மாதம், மிஸ் Golf என்ற பெண் ஒரு புத்தத் துறவியுடன் பாலியல் உறவு வைத்து, பின்னர் அவரது குழந்தையை சுமப்பதாக கூறி, 70 லட்சத்திற்கும் அதிகமாக பணத்தை மிரட்டி வாங்கியதாகத் தெரிகிறது. அதேபோல், அடுத்தடுத்து ஒன்பது துறவிகளுடன் பாலியல் உறவு கொண்டு, அவர்களிடம் இருந்து மொத்தம் இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாய் பெற்றதாகவும் காவல்துறைக்கு தகவல் வெளியானது.
 
இதனை அடுத்து, காவல்துறை சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியபோது, புத்த துறவிகளுடன் பாலியல் உறவு கொண்டு மிரட்டியது  மிஸ் Golf என்பதை உறுதிப்படுத்தினர். இதன் பின்னர், அவரது வீட்டில் அதிரடியாக சோதனை செய்தபோது, 80,000 புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வீடியோக்கள் அனைத்தும் புத்தத் துறவிகளை மிரட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டன என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
இதனை அடுத்து, மிஸ் Golf கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்