ஒடிசா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு பிஜூ ஜனதா தளம் கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசாவில் நடைபெற்ற சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தலில் பதிவான மொத்த வாக்கு சதவீதத்திற்கும் எண்ணப்பட்ட வாக்குகளின் சதவீதத்திற்கும் இடையே 30% அதிகமாக வித்தியாசம் இருந்ததாக தேர்தல் ஆணையத்திடம் பிஜு ஜனதா தளம் குற்றச்சாட்டு கூறியுள்ளது.
மாவட்ட தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் உள்ள எண்ணிக்கையில் பெரிய அளவு மாறுபாடு இருப்பது ஏன் என்ற கேள்வியை பிஜு ஜனதா தளம் எழுப்பி உள்ளது.
தலைமை தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த கட்சியின் சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஒடிசா சட்டமன்ற தேர்தலில் பாஜக 78 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது என்பதும், பிஜு ஜனதா தளம் 51 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.