வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் வழக்கு..!

Mahendran

சனி, 21 டிசம்பர் 2024 (09:47 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட பிரியங்கா காந்தி அபாரமாக வெற்றி பெற்ற நிலையில், அவருடைய வெற்றியை எதிர்த்து அதே தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல் வெளியானது.

கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஐந்து லட்சத்துக்கு அதிகமான ஓட்டுத் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் பிரியங்காவின்  வெற்றியை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் நவ்யா ஹரிதாஸ் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பிரியங்கா காந்தி தனது வேட்புமனுவில் குடும்பத்தினரின் சொத்துக்களை மறைத்துள்ளதாகவும், உண்மையான விவரங்களை அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால், அவரது வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும், வயநாடு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு கேரளா ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்