அனைத்து தொழில்கள் வளங்கள் எல்லாம் ஒரே ஒரு நபரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. துறைமுகங்கள் முதல் விமான நிலையங்கள் வரை, சுரங்கங்கள் முதல் பொது நிறுவனங்கள் வரை அனைத்தும் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன," என அவர் குற்றம் சாட்டினார்.
தனியார் மயமாக்கல், உயர் பதவிகளில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்களை நியமிப்பது, இட ஒதுக்கீடு கொள்கையை பலவீனம் ஆக்குவது ஆகிய முயற்சிகளை மத்திய அரசு செய்கிறது என்றும் அவர் கூறினார்.
இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும் அரசியல் சட்டத்தை மாற்றுவது குறித்த விவாதங்கள் இனி நடக்காது என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அனைத்து எதிர்கட்சிகளும் கூறிவரும் நிலையில், மத்திய அரசு அதனை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
நேரு காலத்தில் தான் ஹெச்ஏஎல், பெல், செயில், கெயில், ஓஎன்ஜிசி, என்டிபிசி, ரயில்வே, ஐஐடி, ஐஐஎம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பல பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டதாகவும், அதனால் நாட்டின் வளர்ச்சி உறுதியாக வேரூன்றியதாகவும் அவர் பேசினார்.